ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ – தீயணைப்பு வீரர் பலி!
ஆஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்களில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் நகரமான புலாஹ்தேலா (Bulahdelah) அருகே பரவி வரும் காட்டுத்தீயால் சுமார் 3,500 ஹெக்டேர் (8,650 ஏக்கர்) நிலப்பரப்பு அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அப்பகுதியில் அமைந்திருந்த நான்கு குடியிருப்புகள் அழிவடைந்ததாகவும், தீயணைப்பு வீரர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் பல நாட்கள் தீயை எதிர்த்துப் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
அதேபோல் நியூ சவுத் வேல்ஸ் ( New South Wales) முழுவதும் 52 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாநிலத்தில் வார இறுதியில் மொத்தம் 20 வீடுகள் அழிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் டாஸ்மேனியா(Tasmania) டால்பின் சாண்ட்ஸின் (Dolphin Sands) கடலோரப் பகுதிகளிலும் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




