இந்தியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று – 100 பேர் தனிமைப்படுத்தலில்!
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் இரண்டு செவிலியர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு சுகாதார ஊழியர் ஆகியோர் அடங்குவர், சில நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் அதன் தொற்றுநோய் திறன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் முன்னுரிமை நோய்க்கிருமியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதுவரை தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





