இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது.
தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் சடுதியாக அதிகரித்துள்ளது.
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 216,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு 199,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,975 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
(Visited 11 times, 11 visits today)