ரணிலிடமிருந்து சஜித்துக்கு பறந்த அழைப்பு: அரசியல் களத்தில் நடக்க போவது என்ன?
ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் Sajith Premadasa முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட இருவரும் இரு அணிகளில் வேட்பாளர்களாக களமிறங்கினர். விட்டுக்கெடுப்பு செய்யவில்லை.
ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கைதானபோதே அவரை சந்திப்பதற்கு சஜித் சென்றிருந்தார். இருவருக்கும் இடையில் மீண்டும் அரசியல் உறவு மலர்ந்தது.
இந்நிலையிலேயே புத்தாண்டு தினத்தில் இருவரும் தொலைபேசிமூலம் கலந்துரையாடியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியை நோக்கி பயணிக்கும் நிலையில் இக்கலந்துரையாடல் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க இணக்கத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான நேரடி சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.





