அரசியல் இலங்கை செய்தி

50 ஆண்டுகால அரசியலில் ரணில் இழைத்த பெரும் தவறு: வெளியான அறிவிப்பு!

“ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும் அவரின் அனுபவம் எமக்கு தேவை.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி Chaminda Wijesiri தெரிவித்தார்.

பதுளையில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருகின்றார் என வெளியாகும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த சமிந்த விஜேசிறி எம்.பி. (Chaminda Wijesiri) கூறியவ வருமாறு,

“ரணில் விக்கிரமசிங்க அனுபவம் உள்ள சிறந்த தலைவர். எனினும், இலங்கையை (Sri Lanka) வங்குரோத்து அடைய செய்த தரப்புகளுடன் இணைந்து அவர்களை பாதுகாத்ததால்தான் ரணில் விக்கிரமசிங்க செய்த பெரிய தவறு.

அவர் மீண்டும் நாடாளுமன்றம் (parliament) வருவாரா அல்லது இல்லையா என்பது எமக்கு தெரியாது. இருந்தாலும் அவரின் அனுபவம் எமக்கு தேவை.

ஐக்கிய மக்கள் சக்தி (SJP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி தொடர்கின்றது. நாட்டு மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்.

இதனை இரு கட்சிகளின் தலைவர்களும் புரிந்து செயல்பட வேண்டும். ஏனெனில் நாட்டை மீட்கக்கூடிய அணி எமது பக்கம்தான் உள்ளது.” – என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 1970 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். எனினும், 1977 ஆம் ஆண்டு முதலே அவரது நாடாளுமன்ற அரசியல் பயணம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை, ராஜபக்சக்களின் ஆதரவுடன் அவர் ஜனாதிபதியானார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ராஜபக்சக்களே வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றனர் என்ற குற்றச்சாட்டை சஜித் அணி தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!