இலங்கை

தேர்தலை கொண்டே ரணில் விக்கிரமசிங்க தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் – கஜேந்திர குமார் பொன்னம்பலம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டுசெல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஜனாதிபதியை பாராட்டவேண்டும். ஏனென்றால் சரியான தரப்புகள் யார்,ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்?,ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று (22.12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே சர்வதேச சமூகத்திற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில் முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தது.

இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும்போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக தெளிவாக சொன்னது. இவை அனைத்தும் ஒரு நாடகம்,இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படடுள்ள நிலையில் பிச்சை கேட்கும் நாடாக மாறியிருக்கின்ற நிலையில் இந்த நிலைமை உருவாகுவதற்கான அடிப்படை காரணமே இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் அதுவொரு யுத்ததிற்கு இட்டுச்சென்று இறுதியில் அந்த யுத்திற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள்தான் கடனுக்குள் இலங்கை மூழ்குவதற்கு முக்கிய காரணியென்றும் இன்று வரவு செலவிட்டத்தில் சுமார் 15வீதம் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படுகின்றது என்றால் நாடு முன்னேறமுடியாது,

இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்ட சூழலில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக காட்டுவதற்கு எடுக்கப்படுகின்ற நாடகமே தவிர ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் இந்த பிரச்சினையை தீர்க்கமாட்டார் என்று கூறி நாங்க்ள சவால் விட்டோம்.

துமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதாகயிருந்தால் சிங்கள மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர் தேசத்தினை அங்கீகரிக்கின்ற இறைமையினை அங்கீகரிக்கின்ற ஒரு சமஸ்டி தீர்வு,பேச்சுவார்த்தைகள் ஒற்றையாட்சியை தாண்டி இந்த பிரச்சினை சமஸ்டியின் அடிப்படையில் தீர்க்கப்படுவதாக அமையும் என்ற உண்மையினை ரணில் விக்ரமசிங்க சிங்கள மக்களுக்கு வெளிப்படையாகவே கூறினால் இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நம்பிக்கைகொள்ளமுடியும்.

அதனை செய்யாமல் வெறுமனே தீர்வுக்கு வாருங்கள் பேசுவோம்,பெப்ரவரி 04ஆம் திகதிக்கு முன்னர் தீர்வினை கொடுப்போம் என்பதெல்லாம் பம்மாத்து,அப்பட்டமான பொய்கள்,சர்வதேச நெருக்கடிகளை சமாளித்தப்பது மட்டுமேயாகும். அதனாலேயே பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு மறுத்தோம்.நாங்கள் ஏமாறுவதற்கும் தயாரில்லை,ஏமாற்றப்படுவதற்கும் தயாரில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழினத்தை ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்ததேர்தலில் வெற்றிபெறுவதற்கான நிகழ்ச்சி நிரலை கொண்டுசெல்வதற்காக மட்டும் செல்லும் இந்த பாதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது.எங்களை ஏமாற்றமுடியாது என்பதற்காக எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை.அதற்காக ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார்,ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார் ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் சரியா கண்டுபிடித்துள்ளார்.

ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் தொடக்கம் கூறிவந்த பொய்யை நேற்றைய சந்திப்பில் வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.அடுத்த தேர்தலின் பின்னர் ஒரு வருடத்திற்குள் தீர்வு வழங்குவேன் என்று கூறியிருக்கின்றார்.கடந்த ஒன்றரை வருடமாக சொன்ன பொய்யை நம்பி ஏமாந்தவர்கள் தற்போது கூறும் புதிய பொய்யையும் நம்பி ஏமாறப்போகின்றார்களா? ஏன்ற கேள்வியிருக்க இவ்வாறான ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தயாரில்லை,தேர்தலின் பிறகுதான் பேசலாம் என்று ரணில் விக்ரமசிங்க இவ்வாறான தெளிவான செய்தியை வழங்கிய பின்னரும் தமிழர் தரப்பு அவருக்கு முன்டுகொடுக்குமானால் வெறுமனே ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று நிரூபிக்கப்படும். தயவுசெய்து நீங்கள் எடுக்கும் தமிழ் வாக்குகளுக்கு நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ஷ  தரப்பையும் தொடர்ந்து காப்பாற்றவேண்டாம்.

இந்த 13 வது திருத்தம் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கின்ற விடயம் அதில் உச்ச நீதிமன்றம் ஆழமான ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் கிட்டத்தட்ட முப்பது தீர்ப்புகள் இந்த 13ஆம் திருத்தத்திற்குள் அதிகாரம் பகிரப்பட முடியாது ஒற்றையாட்சி முறைக்குள் இருக்கும் வரைக்கும் அதிகார பகிர்வு நடக்கவே நடக்காது என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்ற சூழ்நிலையில் அந்த உண்மை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பலப்படுத்தி இன்று மக்களும் அதை உணரத் தொடங்கி இருக்கின்ற இந்த சூழ்நிலையில் அந்த உண்மையை மூடி மறைத்து ஏதோ தாங்கள் சரியானதற்காக தான் தொடர்ந்தும் இருப்பதாக காட்டிக்கொல்வதற்காக இப்போது 13வது திருத்தம் என்பதனை பெரிய அளவில் வலியுறுத்தாமல் அவர்கள் ஒரு புது உபாயத்தை இன்று நமது மக்கள் மத்தியில் காட்டப் போகின்றார்கள்.

அது என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்கின்ற புதிய கோஷத்தை கதைப்பதன் ஊடாக 13-ம் திருத்தத்தை மெல்ல அமைதியாக வலியுறுத்துவதை மூடி மறைக்கலாம் என்று நினைக்கின்றார்கள்.

அனைவருக்கும் தெரியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்ந்த மற்றைய அனைத்து தரப்பினர்களும் 13ஆவது திருத்தையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர.  நாங்கள்தான் அதனை பிரித்து பார்க்கின்றோம். நாங்கள் தான் கூறுகின்றோம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை அதில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற பெயரிலே கொண்டு வந்திருக்கின்ற 13 வது திருத்தத்தை தான் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

அந்த வேறுபாட்டை நாங்கள் தெளிவுபடுத்தி இந்தியாவிடமும் எமது மக்களிடமும் தெளிவாக கூறியிருக்கின்றோம். இலங்கை அரசிடமும் 13வது திருத்தத்தை நாங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இதில் ஆரம்பப் புள்ளி கூட இல்லை.

இதற்கிடையில்  தேர்தலும் வருகின்றது.  தேர்தலில் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தி சென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்கின்ற பயம் இருக்கின்றது. இதனால் அவர்கள் நினைக்கின்றார்கள் தாங்கள் கெட்டித்தனமாக 13 பெரிதாக கதைக்காமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னால் அதிலிருந்து தப்பலாம் என நினைக்கின்றார்கள்.
ஆனால் எங்களுடைய மக்கள் அதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்ந்த வேறு எந்த தரப்பும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பற்றி உச்சரித்தால் அவர்கள் உண்மையிலேயே குறிவைத்து சொல்லுகின்ற விடயம் இந்த ஒற்றையாட்சிக்குள் இருக்கும் 13ம் திருத்தத்தை தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அதைத் திட்டமிட்டு எதிர்காலத்தில் மூடி மறைப்பதற்காக இந்த சொற்பதங்களை மாற்றி அவர்கள் எதிர்காலத்தில் பேசுவார்கள். உண்மையில் பத்திரிகை வந்து அதைத் தாண்டி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பற்றி பேசியபோது அதையும் தாண்டி 13 ஆம் திருத்தத்தை அமல்படுத்துங்கள் என தலையங்கத்தை போட்டதினை நான் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் அதுதான் உண்மை இந்த உண்மையை இந்த தமிழ் தரப்புகள் மூடி மறைப்பதற்காகவே இந்திய இலங்கையை ஒப்பந்தத்தை பேசுகின்றார்கள். ஆனால் பத்திரிகைகள் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒற்றை ஆட்சிக்குள் தமிழரசி தரப்புகள் முடக்க பார்க்கின்றார்கள் என இந்த பத்திரிகைகளில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

தமிழருக்கு நன்றாக தெரியும். ரணில் விக்ரமசிங்க எதுவுமே செய்யப் போவதில்லை என்று அவருக்கு ஒரு எண்ணம் இருந்தாலும் கூட ஒன்றும் செய்ய மாட்டார். ஏனென்றால் தேர்தல் வரப்போகின்றது.  தேர்தலில் வெற்றிப்பெற  வேண்டும் என்பதனை தான் சிந்திக்கப் போகின்றார். ஆகவே கடைசி வரைக்கும் அவருக்கு எண்ணம் இருந்தாலும் அவர் செய்யப் போவதில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படிப்பட்ட எண்ணமே கிடையாது. இதனை தெளிவாக விளங்கிக் கொண்டுதான் நாங்கள் தொடர்ச்சியாக இவருடைய ஆட்சியை நம்பாதீர்கள். இவருடைய வார்த்தைகளை நம்பாதீர்கள் என மக்களுக்கு தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வருகின்றோம்.

ரணில் விக்கிரமசிங்க நம்பாதீர்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் கூட 2005 ஆம் ஆண்டு எமது மக்களிடம் சொன்னார்கள். அன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த உண்மையை மக்களிடையே சொல்ல மக்கள் குழம்பி விட்டனர். தமிழ் ஆய்வாளர்கள் குழம்பினர். ஏதோ புலிகள் வந்து பிழையாக இந்த விடயங்களை கணக்குப்போடுகின்றார்கள்  என்று.  எந்த அளவு தூரத்திற்கு ஒரு தீர்க்கதரிசனம் என்பது இன்று இந்த ரணில் விக்ரமசிங்கவின் செயல்பாடுகளினால் நிரூபித்து இருக்கின்றார். அதுதான் உண்மை.

ஆகவே இந்த ரணில் விக்கிரமசிங்கமிடம் வந்து உண்மையைக் கூறினால் எதையும் எதிர்பார்க்க முடியாது. பயங்கரவாத சட்டத்தின் கீழ் தொடர்ந்து நீங்கள் பிடிக்கிற தன்மையை நிறுத்துங்கள் பிடித்திருப்பவர்களை விடுதலை செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content