சிங்கப்பூர் வைத்தியசாலையில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு Ranil Wickremesinghe அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று ஐ.தே.க. முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க Ravi Karunanayake தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய நாம் பிரார்த்திப்போம்,” எனவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.




