தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் எம்.பியாகும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணத்தில் இருப்பதாக எதிர்க்கட்சியின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்திருந்த ரணில் விக்ரமசிங்க, 2021ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உருவெடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் படுதோல்வியடைந்திருந்ததால் அரசியல் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.
என்றாலும், ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றத்துக்கு செல்லும் எண்ணத்தில் காய்களை நகர்த்தி வருவதாக எதிர்க்கட்சிகளின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.





