இலங்கை

பொதுஜன பெரமுனவுடன் ரணில் கூட்டு சேரக் கூடாது : இலங்கை மக்களின் கருத்து!

இலங்கையில் தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில், ஏறக்குறைய 76% வாக்காளர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்களுடன் கூட்டு சேரக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களுடன் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டுமா?  என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், 76 சதவீதமான மக்கள் கூடாது என்ற பதிலை தெரிவு செய்துள்ளனர்.

மொத்தம் 1,645 பதிலளித்தவர்களில், கிட்டத்தட்ட 76% பேர் ‘இல்லை’ என்றும், கிட்டத்தட்ட 21% பேர் ‘ஆம்’ என்றும், கிட்டத்தட்ட 3% பேர் ‘தெரியாது’ என்றும் வாக்களித்துள்ளனர்.

கடந்த மாதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி விக்ரமசிங்க கலந்துகொண்ட கூட்டத்தில் தனது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற குழுவிற்கு ராஜபக்சக்கள் எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்கத் தயாராக இல்லை என்று தெரிவித்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!