இலங்கையில் ஜனாதிபதி பதவியில் தொடர ரணில் சூழ்ச்சி
இலங்கையில் குழப்பம் ஒன்றை ஏற்படுத்தி தொடர்ந்தும் ஜனாதிபதியாகவே இருப்பதற்கான சூழ்ச்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் 9ம் திகதி இரத்தக் களரியை சுவைத்தவர்கள் ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.
தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்னதாகவே அவர்கள் இரத்தக் களரியை சுவைப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
தற்போது ரணில் தேர்தல் வெற்றிக்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறார். இதற்காக அவர் எடுக்கின்ற நடவடிக்கைகளால் சஜித்தே பாதிக்கப்படுகிறார்.
அதனால் ரணிலுக்கும் நன்மை இல்லை. மூன்றாம் தரப்பு ஒன்றே நன்மையைப் பெற்றுக் கொள்ளப் போகிறது.
அந்த மூன்றாம் தரப்பானது, ஏற்கனவே பல ஒன்பதாம் திகதிகளில் இரத்தத்தை சுவைத்த அணியினர்தான்.
அவர்கள் நாட்டில் கலவரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, தேர்தல் முடிவை வெளியிடாமல், தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே பதவியில் நீடிப்பதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது என்று விமல் வீரவன்ச குற்றம் சுமத்தினார்.