சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமைாவை சந்தித்தார் ரணில்!
சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டின் ஜனாதிபதியான ஹலிமா யாக்கோப்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று (21.08) முற்பகல் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், பாதுகாப்பு அமைச்சர் நெங் எங் ஹென் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ ஹை யென் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மேலதிகமாக, பாரிஸ் உடன்படிக்கையின் பிரகாரம் கரியமில வாயு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை இருநாடுகளும் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Ng Hen ஐச் சந்தித்து, புவிசார் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் சிறிய கடல் நாடுகளுக்கான பிராந்திய ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.