சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய ரணில்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம், சர்வதேச ஊடகங்களில் முக்கியமான தலைப்பாக மாறியுள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பல முன்னணி ஊடக நிறுவனங்கள், இந்த செய்தியை முன்னணி கட்டுரையாக வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த சம்பவம், உலகளாவிய அரசியல் பார்வையாளர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. தலைப்புகளில், “அரச நிதி முறைகேடு” என்பதே முக்கிய தலைப்பாகியுள்ளது.
இந்நிலையில், உலகத் தலைவர்களில் ஒருவரான மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “ரணில் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.