சிக்கலில் ரணில்
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்தமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இது தொடர்பான கொள்வனவுகளை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனு தொடர்பில், மனுதாரர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு இன்று (06) முகம்மது லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முனஅனிலையில் விச்ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்கள் உண்மைகளை சமர்பித்து, ஐந்து மில்லியன் இ-பாஸ்போர்ட் வாங்குவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த இடைக்கால தடை உத்தரவு வழக்கு விசாரணை முடியும் வரை அமுலில் இருக்கும் என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், குறித்த இடைக்கால உத்தரவை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரயா, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து, முறைசாரா கொள்முதல் முறையின் கீழ் இந்த கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த இடைக்கால உத்தரவை நீக்குவதற்கான கோரிக்கையை தாம் எதிர்ப்பதாகவும், இந்த வழக்கை உடனடியாக விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்குவதே பொருத்தமானது எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த அமர்வு, இடைக்கால உத்தரவை நீக்குவதற்கான கோரிக்கை தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் மனுதாரருக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 9 ஆம் திகதி நடைபெறும் என்று உத்தரவிட்டது.
750,000 சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் 05 மில்லியன் இ-பாஸ்போர்ட்டுகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது.