தனி பாதுகாப்பு பிரிவை கோறும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனாதிபதியின் செயலாளரான அனுர திஸாநாயக்கவிற்கு கடிதம் மூலம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரிய கடிதத்தை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி, 163 பாதுகாவலர்கள், 15க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள், 6 மருத்துவ பணியாளர்கள், கணினி, பிரிண்டர் ஆகியனவும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி அநுர திஸாநாயக்கவிற்கு குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் வசதிகள் உள்ள நிலையில், ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக தனியான பாதுகாப்புப் பிரிவை ஏற்படுத்துமாறு கோருவது கூட பிரச்சினைக்குரிய விடயமாகும்.