ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் கடன்களை முழுமையாக இரத்து செய்யுமாறு கோரும் ரணில்
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொருளாதார பலம் இல்லாத ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிவாரணத்தை இலங்கை எதிர்பார்க்கவில்லை எனவும், கடனை நிர்வகித்து முன்னோக்கிச் செல்வதற்கான பலமும் விவேகமும் இலங்கைக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, காலநிலை மாற்றத்தை கையாள்வதில் பிராந்திய தலைமைத்துவத்தை எடுக்க இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது வருடாந்தம் ஜனாதிபதியின் சுற்றாடல் விருது வழங்கும் விழாவை சிறப்பாகப் பணியாற்றிய தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மற்றும் தொழில்கள், வர்த்தகம் மற்றும் திட்ட நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வெண்கலப் பதக்கங்கள் மற்றும் விருதுகள் ஆகிய முக்கியத் துறைகளின் கீழ் 124 பேருக்கு அரச விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.