ஜீவனுக்காக நுகேகொடை கூட்டத்தை கைவிட்ட ரணில்!
நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ரணில் நாளை (21) இந்தியா செல்கின்றார் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதன்காரணமாகவே அவர் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்க சாத்தியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நுகேகொடை கூட்டத்தில் தான் பங்கேற்பார் என மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)




