தென் அவுஸ்ரேலிய பிரீமியர் மீது அவதூறு வழக்கு
அவுஸ்ரேலியாவின் புகழ்பெற்ற ‘அடிலெய்ட் எழுத்தாளர் விழா’ சர்ச்சைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தென் அவுஸ்ரேலிய பிரீமியர் பீட்டர் மலினாஸ்காஸ் (Peter Malinauskas) மீது பாலஸ்தீனிய எழுத்தாளர் ரந்தா அப்தெல்-பத்தா அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த ஆண்டு விழாவில் பங்கேற்கவிருந்த ரந்தாவின் பெயர் நீக்கப்பட்டதை அடுத்து, 180-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் விழாவைப் புறக்கணித்தனர்.
இதனால் விழா முற்றிலும் ரத்து செய்யப்பட்டதுடன், அதன் இயக்குநரும் பதவிலகினார்.
இந்நிலையில், தன்னை பயங்கரவாத ஆதரவாளருடன் ஒப்பிட்டு பிரீமியர் பேசிய கருத்துக்கள் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, ரந்தா சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் அவுஸ்ரேலிய அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





