இஸ்ரேல் மக்களுக்கு ஆதரவு வெளியிட்டு சூரிச்சில் பேரணி
இஸ்ரேல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சூரிச்சில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் அணி திரண்டு இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
யூத மத சமூகத்தினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹமாஸ் போராளிகளினால் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட, மற்றும் கடத்தி வைக்கப்பட்டு இருக்கின்ற இஸ்ரேலிய மக்களுக்கு ஆதரவினை வெளியிடும் நோக்கில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணிக்கு யூத மத அமைப்புகளும் ஏனைய நிறுவனங்களும் ஆதரவினை வழங்கியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து தேசிய கொடிகளை அசைத்த வண்ணமும் ஹமாஸ் தீவிரவாத போராளிகளை கண்டிக்கும் வகையிலான கோஷங்களை எழுப்பியும் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





