இந்தியா

ராஜஸ்தான் – இன்ஸ்டாகிராம் பிரபலத்தை துள்ளத்துடிக்க சுட்டுக் கொன்ற கணவர்!!

ராஜஸ்தானில் இன்ஸ்டாகிராம் பிரபலமான மனைவியை, கணவனே நேருக்கு நேர் சுட்டுக்கொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானின் பலோடியை சேர்ந்தவர் அனாமிகா பிஷ்னோய். இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் தனது அலுவலகத்தில் நேற்று இருந்தபோது, அங்கு அவரது கணவரான மஹிராம் வந்தார். வாக்குவாதத்தின் மத்தியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி அனாமிகாவை சுட்டுவிட்டு தப்பியோடினார்.

மிகவும் நெருக்கமான தொலைவில் நேருக்கு நேர் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அனாமிகா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள், அனாமிகாவின் அலுவலக அறையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. முதல் புல்லட் வெளிப்பட்டதோடு, ரிவால்வர் திடீரென ’ஜாம்’ ஆகிவிட, அதனை சரி செய்து துப்பாக்கிச் சூட்டினை மஹிராம் மீண்டும் தொடர்ந்திருக்கிறார்.

How Shooting a Gun May Affect Your Mind and Body

குடும்பத் தகராறு காரணமாக கணவர் மஹிராமை பிரிந்து அனாமிகா தனியாக வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பிரபலம் என்ற வகையில் ராஜஸ்தானில் நன்கு அறியப்பட்ட நபராகவும் அனாமிகா விளங்கி வந்தார். வரதட்சணை புகார் தொடர்பாக கணவர் – மனைவி இடையிலான பிரச்சினை நீதிமன்றத்தில் வழக்காக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மனைவி பணியாற்றும் அலுவலக அறைக்கு வந்த கணவர் மஹிராம், சில அடி தொலைவில் கைத்துப்பாக்கி கொண்டு மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார். இதில் படுகாயமடைந்த அனாமிகா, கழுத்தில் பாய்ந்த குண்டு காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். அனாமிகாவின் இன்ஸ்டாகிராம் பிரபல்யம் காரணமாக, அவர் சுட்டுக் கொல்லப்படும் பகீர் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே