பிரித்தானியாவில் அடுத்த வாரம் முழுவதும் மழை பெய்யும் – Met office எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்திற்கு மாறாக வறண்ட மாதத்தைத் தொடர்ந்து, அடுத்த வாரம் “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலான நாட்கள் மழை பெய்யும்” என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் 5-10 மிமீ மழை பெய்தது, அதே நேரத்தில் இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் 15-20 மில்லியன் மழை பதிவாகியுள்ள நிலையில் மீண்டும் அவ்வாறான ஒரு வானிலை நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
லண்டனில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வெப்பநிலை 21C ஐ எட்டக்கூடும், அதே நேரத்தில் அபெர்டீன் போன்ற ஸ்காட்லாந்தின் பகுதிகளில் 14C ஐ மட்டுமே வெப்பநிலை பதிவாகும் எனக் கூறப்படுகிறது.