50 ஆண்டுகளுக்குப் பிறகு சஹாராவில் மழை
சஹாரா பாலைவனம் சுமார் 50 ஆண்டுகளில் முதல் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவை அனுபவித்து வருகிறது.
இதன் காரணமாக சஹாரா பாலைவனத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக நாசா எடுத்த செயற்கைக்கோள் படங்களையும் வெளிநாட்டு ஊடகங்கள் பரப்பி வருகின்றன.
பல தசாப்தங்களாக மழையின்றி காணப்பட்ட சஹாரா பாலைவனம், பல பிரதேசங்களில் பெய்து வரும் மழையினால் மீண்டும் அறிமுகமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.





