டிசம்பர் 09 முதல் மீண்டும் மழை?
எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகதாகவும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் எனவும் இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா ரிவித்துள்ளார்.
எனினும் இது புயலா, காற்றழுத்த தாழ்வு மண்டலமா என்பதைக் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)