மேற்கு ரஷ்யாவில் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து!

மேற்கு ரஷ்யாவில் ரயில் பாதையில் பாலம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குழாய்கள் சேதமடைந்ததால் சுமார் 8,000 வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாததால் பாலம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 12 times, 1 visits today)