இங்கிலாந்தில் புயல் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட ரயில் பாதை – மக்களுக்கு அவசர அறிவிப்பு
இங்கிலாந்தின் டெவோன் (Devon) தெற்கில் ஏற்பட்ட புயல் “இங்க்ரிட்” (Storm Ingrid) காரணமாக, எக்சிடர் செயின்ட் டேவிட்ஸ் (Exeter St David’s) மற்றும் நியூட்டன் அபோட் (Newton Abbot) இடையேயான ஒரே ரயில் பாதை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
கடல் அலைகள் 4 மீற்றர் அளவிற்கு தாக்கியலதால் கடல் சுவர் இடிந்ததுடன், டாவ்லிஷ் (Dawlish) பகுதியில் ரயில் பாதை சேதம் அடைந்தது.
இதனால் நெட்வொர்க் ரயில் (Network Rail) கருப்பு எச்சரிக்கை அறிவித்தது. 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பிறகு கருப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இரண்டாவது சம்பவம்.
இந்நிலையில் இந்த பாதையில் பயணம் செய்ய முயற்சிக்க வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எக்சிடர் செயின்ட் டேவிட்ஸ் (Exeter St David’s) மற்றும் நியூட்டன் அபோட் (Newton Abbot) இடையே மாற்று பேருந்து சேவை கிடைக்கும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதையின் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு மட்டுமே மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அருகிலுள்ள டீக்ன்மவுத் (Teignmouth) பியர் மற்றும் கப்பல்துறை சேதமடைந்தது.
டோர்பாயிண்ட் (Torbay Point) கிராமத்தில் வீடுகள் அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
நெட்வொர்க் ரயில் (Network Rail) பாதையை பாதுகாப்பாக மீண்டும் திறக்க, சோதனை மற்றும் பழுது பணி தேவைப்படும் என்பதால், பயணிகள் மாற்று வசதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





