சொகுசு வாகன வரி ஏய்ப்பு தொடர்பாக பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் வீடுகளில் சோதனை
சொகுசு கார் வரி ஏய்ப்புக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க அதிகாரிகள் ‘நும்கோர்’ என்ற குறியீட்டுப் பெயரில் நாடு தழுவிய சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 30 இடங்களில் உயர்மட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இதன் அடிப்படையில் பிரபல நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
குறித்த சோதனையில் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனத் துறையுடன் நெருக்கமாகப் பணியாற்றும் சுங்க அதிகாரிகள், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கார் ஷோரூம்களிலும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





