செய்தி

லடாக்கில் பைக் ரைடிங்கில் ராகுல்காந்தி …காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று லடாக்கில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடினார்.

இந்நிலையில், ராகுல்காந்தி இன்று லடாக்கின் பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்கிறார். லடாக்கில் இருந்து பைக்கில் பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்கிறார். சுற்றுலா தலமான பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்லும் ராகுல்காந்தி அங்கு தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் (ஆக.20) வழிபாடு நடத்த உள்ளார்.

ராகுல்காந்தி பாங்காங் ஏரிப்பகுதிக்கு பைக்கில் செல்லும் புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பாங்காங் ஏரி சீன எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாங்காங் ஏரிப்பகுதியை மையமாக கொண்டு இந்தியா – சீன படைகள் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி