தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர்.
அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 19 times, 1 visits today)