ஐரோப்பா

முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலா அணிந்திருந்த உடையில் ரகசிய பெயர்கள்

முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலா அணிந்திருந்த வெள்ளை உடையில் சில ரகசிய பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததை தற்போது வெளியிட்டுள்ளனர்.

குறித்த உடையில், இன்னொரு முக்கிய நபராக ராணியார் கமிலாவின் வளர்ப்பு நாய்க்கும் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 75 வயதான ராணியார் கமிலா தமது வாழ்க்கையின் மிக முக்கிய தருணத்தில் அணிந்திருந்த வெள்ளை உடையின் சிறப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அந்த உடையில் தமக்கு மிக நெருக்கமான நபர்கள் சிலரின் பெயர்களை பொறித்திருந்ததாக தெரியவந்துள்ளது. அதாவது தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பெயர்களை ராணியார் கமிலா தமது வெள்ளை உடையில் பொறித்திருந்துள்ளார்.

வாழ்க்கையின் மிகப்பெரிய நாள்... ராணியார் கமிலா அணிந்திருந்த உடையில் ரகசிய பெயர்கள் | Camilla Biggest Day Coronation Gown Secret Names

அதில், தமது பிள்ளைகளான டாம் மற்றும் லாரா ஆகியோரின் பெயர்களும் அத்துடன் ஐந்து பேரப்பிள்ளைகளின் பெயர்களும் ரகசியமாக பொறிக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி, சார்லஸ் மற்றும் கமிலாவின் மீட்பு நாய்கள் பெத் மற்றும் புளூபெல் ஆகியவையின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.

முடிசூட்டு விழாவில் ராணியார் கமிலாவின் பேரப்பிள்ளைகளுக்கும் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டிருந்தது. மறைந்த இளவரசி டயானாவுடன் பணியாற்றிய Bruce Oldfield என்பவரே கமிலாவின் ஆடையை வடிவமைத்துள்ளார்.

(Visited 19 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்