இலங்கை செய்தி

உரத்திற்கும் QR குறியீடு?

எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படும் அச்சம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

கேகாலை தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்

“நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் நிலவும் நிலையில் அரசாங்கம் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்துள்ளது.

நேற்றைய தினம்கூட உற்பத்தி செய்யப்பட வேண்டிய மின்சாரம் 135 மெகாவோட்டால் குறைந்து காணப்படுகின்றது. மின் நிலையத்தின் தரவுகளின்படி அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி அனைத்தும் தரமற்றவையாக காணப்படுகின்றன.

அரசாங்கத்திற்கு இவை பிரச்சினையாகத் தெரியாவிட்டாலும், நிலக்கரி மின் நிலையத்தால் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதனால், எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலக்கரி மோசடியால் இறுதியில் மின்சாரப் பயனாளர்களே அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இதுமட்டுமின்றி தரமற்ற மருந்துகளும் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன.

இவ்வாறு போகும் போக்கைப் பார்த்தால், விவசாயிகளின் உரங்களுக்கும் QR குறியீடு வைக்கப்படுமோ என்று அச்சம் காணப்படுகின்றது.

இந்த அரசாங்கத்தின் ஒழுங்கற்ற, திறனற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தியது உண்மையை உணர்த்துவதற்காகவே” என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!