செய்தி விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்கில் PV சிந்து அதிர்ச்சி தோல்வி

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்தியாவின் வீராங்கனையான பி.வி. சிந்து, சீன வீராங்கனையான ஹி பிங் ஜியாவோ என்பவரை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில், 21-19, 21-14 என்ற செட் கணக்கில், சிந்துவை வீழ்த்தி ஜியாவோ வெற்றி பெற்றார்.

இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றிருந்த சிந்து இந்த முறை தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

2020-ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜியாவோவை வீழ்த்தி சிந்து வெண்கலம் வென்றார். அடுத்து ஆகஸ்டு 3-ல் நடைபெறும் போட்டியில் சீனாவின் சென் யுபெய் என்பவரை எதிர்த்து ஜியாவோ விளையாடுவார்.

(Visited 35 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி