போரினால் மன அழுத்தத்தில் உள்ள புடின் : மஸ்க் வெளியிட்டுள்ள கருத்து!
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி வருவதற்கு எதிராக புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரில் தோற்கப் போகிறார் என்றும் “நரகத்தில் வழியில்லை” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுடன், உக்ரைன் போரிடுவதற்கு தேவையான நிதியை வழங்குவது குறித்து அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் விவாதத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஸ்க், “இந்தச் செலவு உக்ரைனுக்கு உதவாது. போரை நீடிப்பது உக்ரைனுக்கு உதவாது எனத் தெரிவித்துள்ளார்.
போரை முடிக்க புடின் அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளார்.
“ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்புவோர், புடினை வெளியேற்றக்கூடிய நபர் யார் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும், அந்த நபர் அமைதியானவராக இருக்க முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.