ஐரோப்பா

பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட புதினின் கடற்படை தளபதி !

உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதி ஒருவர், பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவர், பட்டப்பகலில், ஜாகிங் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ரஷ்யாவிலுள்ள Krasnodar என்ற நகரில், அவர் ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார், நெஞ்சிலும் முதுகிலும் நான்கு முறை சுடப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.அவரது கைக்கடிகாரம் முதலான எந்த பொருளும் திருட்டு போகாததால், இது கொள்ளை முயற்சி அல்ல என தெரியவந்துள்ளது.

Russian sub officer who ordered strikes on Ukraine civilians assassinated out jogging... - LBC

உக்ரைன் நகரமான Vinnytsia மீது ஏவுகணை ஒன்றை ஏவ ஸ்டானிஸ்லாவ் உத்தரவிட, அந்த ஏவுகணை 27 பேரை பலிகொண்டது.உயிரிழந்தவர்களில், நான்கு வயதுக் குழந்தையான லிஸாவை யாராலும் மறக்கமுடியாது. லிஸாவின் தாய் ஐரினா அவளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது அவர்கள் இருவரும் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானார்கள். தாக்குதலில் லிஸா கொல்லப்பட்டாள், அவளது தாய் படுகாயமடைந்தார்.

இதற்கிடையில், ஸ்டானிஸ்லாவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், CCTV இல்லாத இடத்தில் வைத்துத்தான் அவரைத் தாக்கியுள்ளார். என்றாலும், தாங்கள் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரைத் தேடிவருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்