புடினின் முக்கிய அரசியல் எதிரியான அலெக்ஸி நவல்னியை காணவில்லை : வெளியான அதிர்ச்சி தகவல்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியிடம் இருந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்களன்று, நவல்னியின் நீதிமன்ற விசாரணைக்கு அவர் மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகவில்லை, சிறை அதிகாரிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோவின் கிழக்கே உள்ள விளாடிமிர் பகுதியில் உள்ள IK-6 தண்டனைக் காலனியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை காணவில்லை எனவும் அவர் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் அவரின் கூட்டாளிகள் கூறியுள்ளனர்,
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைவர் ஜோசப் பொரெல் , சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி ஏழு நாட்களாகக் காணாமல் போனதாகக் கூறப்படுவது “மிகவும் கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார் .