ஜெலன்ஸ்கியை புட்டின் சந்திக்க மாட்டார் – டிரம்பின் அறிவிப்பால் அதிர்ச்சி

போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சந்திக்க மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜெலேன்ஸ்கியின் மீது புட்டினுக்கு விருப்பமில்லை என்பதால், இந்தச் சந்திப்புக்கு மறுத்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இருவரும் சந்திக்காவிட்டால், பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சூழ்நிலையில் தாம் மீண்டும் இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டியேற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
இதற்காக அவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கங்களும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில், யுக்ரைனில் அமைதி ஏற்படுவதை ஐரோப்பியத் தலைவர்கள் தடுக்கின்றனர் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.