ஐரோப்பா

உக்ரேனியப் படைகளை விரட்டியடித்த பிறகு முதல் முறையாக குர்ஸ்க் பிராந்தியத்திற்கு பயணம் மேற்கொண்ட புதின்

ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது படையெடுத்தது. இரு நாட்டின் எல்லைகளில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான இடங்களை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது. சில இடங்களில் ரஷ்ய பின்வாங்கியது.

பின்னர் தரைவழி தாக்குதலை குறைத்துக் கொண்ட ரஷியா, உக்ரைன் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நுழைந்தது. அப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்றியது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 26ஆம் திகதி, குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படைகள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டது என ரஷிய ராணுவம் தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இதை மறுத்தனர்.இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் குர்ஸ்க் பிராந்தியம் சென்றதாக, ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

குர்ஸ்க் அணுஆயுத நிலையம்-2 கட்டப்பட்டு வருகிறது. இதை புதின் பார்வையிட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட தன்னார்வலர்களுடன் ரகசியமாக பூட்டிய அறையில் ஆலோசனை நடத்தியுள்ளார். அத்துடன் பொறுப்பு கவனர் அலேக்சாண்டர் கின்ஸ்டெய்ன் உடனும் பேசியுள்ளார்.

உக்ரைன் ஆக்கிரமிப்பால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யப்படும் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு முழுவதும் 159 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன ராணுவத்தை பின்வாங்க செய்ய, ரஷியாவுக்கு ஆதரவாக 12 ஆயிரம் வீரர்களை வடகொரியா அனுப்பியதாக உக்ரைன், அமெரிக்கா மற்றும் தென்கொரிய குற்றம்சாடடியது. பின்னர் வீரர்கள் அனுப்பப்பட்டதாக வடகொரியா ஒப்புக்கொண்டது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!