முழு அளவிலான அமைதி ஒப்பந்தத்தை புட்டின் ஏற்க வாய்ப்பிலை – நிபுணர்கள் எச்சரிக்கை!
ரஷ்யா தனது போர்ப் பொருளாதாரத்தை நம்பியிருக்கிறது. ஆகவே விளாடிமிர் புடின் உக்ரைனில் முழு அளவிலான அமைதி ஒப்பந்தத்தை ஏற்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவின் மொத்தப் பொருளாதாரத்தில் சுமார் 40% போரிற்காக ஒதுக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பொருள், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகள் ஆகியவற்றைக் காட்டிலும் ரஷ்யாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகம் செலவிடப்படும் என்பதாகும்.
லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுனர் டாக்டர் ரெனாட் ஃபூகார்ட், “சீனாவின் அடிமையாக இருக்க விரும்பினால் ஒழிய, ரஷ்யாவால் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது எனக் கூறியுள்ளார். காரணம் பொருளாதாரத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிகள் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி புட்டினுடன் ஏற்படுத்திய எந்தவொரு ஒப்பந்தமும் போர் நிறுத்தத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.