போரை முடிவுக்கு கொண்டுவர புட்டின் எந்த அறிகுறியையும் காட்டவில்லை – ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மீதான மாஸ்கோவின் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் “எந்த அறிகுறியையும்” காட்டவில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அலாஸ்காவில் நடைபெறும் அமெரிக்க-ரஷ்யா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடர்கின்ற நிலையில் ஜெலன்ஸ்கியின் இந்த கருத்து வந்துள்ளது.
“ரஷ்யாவின் ஏமாற்றுதலைத் தடுக்க, எங்கள் கூட்டாளிகளான உக்ரைனின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
“ரஷ்யர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராகி வருவதற்கான எந்த அறிகுறியும் இப்போது இல்லை,” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)