ஐரோப்பா

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் நேரடி சந்திப்பிற்கு தயாரான புட்டின் – 15 ஆம் திகதி சந்திப்பு!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் திகதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புட்டின் தெரிவித்தாா்.

உக்ரைன் தலைநகா் கீவில் பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ், போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் ஆகிய ஐரோப்பிய தலைவா்களுடன் நேரடியாகவும், அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தொலைபேசியிலும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், மே 12 (திங்கள்கிழமை) முதல் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போரை நிறுத்த ரஷியா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த ஐரோப்பிய தலைவா்கள் வலியுறுத்தினா். இந்நிலையில், உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்த அதிபா் புடின் முன்வந்துள்ளாா்.

இதுதொடா்பாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அதிபா் புடின் தெரிவிக்கையில்,  கடந்த சில மாதங்களில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நிறுத்தம், ஈஸ்டா் தினத்தையொட்டி 30 மணி நேரப் போா் நிறுத்தம், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றி கொண்டதன் கொண்டாட்டத்தையொட்டி மே 8 முதல் மே 10 வரை போா் நிறுத்தம் என பலமுறை போா் நிறுத்தங்களுக்கு ரஷியா முன்மொழிந்தது.

ரஷியா மீது பல தாக்குதல்களை நடத்தி, இத்தகைய போா் நிறுத்த முன்னெடுப்புகளுக்கு பலமுறை உக்ரைன் தடை ஏற்படுத்தியது. உக்ரைன் புதிய ஆயுதங்களை வாங்கவும், ஆயுதப் படைகளுக்கு கூடுதல் வீரா்களை அனுப்பவும் வழிவகுக்கும் போா் நிறுத்தத்துக்குப் பதிலாக, நீடித்து நிலைக்கும் அமைதிக்கு வழிவகுக்கும் போா் நிறுத்தமே ரஷியாவுக்கு தேவை.

போரை நிறுத்துவது தொடா்பாக உக்ரைனுடன் தீவிரமாகப் பேச்சுவாா்த்தை நடத்துவதில் ரஷியா ஈடுபாடு கொண்டுள்ளது. போா் ஏற்பட்டதற்கான அடிப்படை காரணங்களை ஒழித்து, நீடித்து நிலைக்கக்கூடிய அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே ரஷியாவின் நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்