இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களிடம் புடின் பேச்சுவார்த்தை
ரஷ்ய(Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin), இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் ஈரானிய(Iran) ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன்(Masoud Pezeshkian) தனித்தனி அழைப்புகளில் ஈரானின் நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும், மாஸ்கோ(Moscow) நாட்டில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு போராட்டம் ஆரம்பமானது.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், ஈரான் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க தாக்குதல் நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.





