வயதான தோற்றத்தை மறைக்க அறுவை சிகிச்சை செய்த புட்டின் : நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினை!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வயதானதற்கான அறிகுறிகளை மங்கச் செய்ய பல ஆண்டுகளாக முக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது அவர் கண்பார்வை குறைப்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புட்டின் போர் சம்பந்தமான உத்தரவுகளை படிப்பதற்கு சிரமப்பட்டதை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.
“தனது பிம்பத்தைக் கெடுக்கக்கூடாது என்பதற்காக” புதின் பொது இடங்களில் கண்ணாடி அணிய மறுக்கிறார் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
2019 ஆம் ஆண்டு வெளியான செய்தி ஒன்றில் புடினுக்கு அவரது தொலைநோக்குப் பார்வையில் சிக்கல்கள் இருப்பதாகவும், அவர் நீண்டகாலமாக இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





