“ஈஸ்டர் போர் நிறுத்தத்தை அறிவித்த புட்டின் – உக்ரைன் கடைப்பிடிக்குமா?

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் “ஈஸ்டர் போர் நிறுத்தத்தை” அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த காலத்தில் உக்ரைனுக்கு எதிரான அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் கடைப்பிடிக்கும் என்று தான் கருதுவதாகவும், ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறும் எந்தவொரு நிகழ்வையும் அடக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.
இருப்பினும், ரஷ்ய அதிபரின் ஈஸ்டர் போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஏற்றுக்கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 2 times, 2 visits today)