ஐரோப்பா

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் புதின் மற்றும் அல்-அசாத் சந்திப்பு

சிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார்.

ரஷ்ய அதிபர் மாளிகையில் புதன்கிழமை (ஜூலை 24) இச்சந்திப்பு இடம்பெற்றதாக அதிபரின் செய்திப் பிரிவு தெரிவித்தது.

“இவ்வட்டாரத்தின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து தங்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளேன். துரதிர்ஷ்டவசமாக, இவ்வட்டாரத்தில் மோதல் போக்கு அதிகரித்து வருவதைக் காண்கிறோம். சிரியாவிற்கும் இது பொருந்தும்,” என்று அதிபர் புட்டின், அசாத்திடம் கூறினார்.

அதற்கு, “உலகத்திலும் யுரேசிய வட்டாரத்திலும் இடம்பெறும் இப்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அவை தொடர்பில் ஆலோசிப்பதற்கான நமது இச்சந்திப்பு மிக முக்கியமானதாகத் தெரிகிறது,” என்று அசாத், அதிபர் புட்டினிடம் தெரிவித்ததாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்