பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம் : நாய் வளர்ப்பு மற்றும் வேட்டைக்குத் தடை
“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும் ‘பப்பி பார்மிங்’ (Puppy Farming) முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளதுடன், நாய்களுக்கான மின்சார அதிர்வு கழுத்துப்பட்டை (Electric Shock Collars) பயன்பாட்டைத் தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், நரி வேட்டைக்கான போர்வையாகப் பயன்படுத்தப்படும் ‘டிரெயில் ஹண்டிங்’ (Trail Hunting) முறைக்கும், வனவிலங்குகளைக் காயப்படுத்தும் பொறி நுட்பங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
விவசாயத் துறையில் கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்ப்பதைத் தவிர்க்கவும், மீன்களுக்கான மனிதாபிமான இறைச்சி உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்தவும் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை விலங்குகள் நல அமைப்புகள் வரவேற்றுள்ள போதிலும், இது கிராமப்புற கலாசாரத்தின் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.





