செய்தி தமிழ்நாடு

புதுச்சேரி சிறுமி துஷ்பிரயோகம் மற்றும் படுகொலை – இருவர் கைது

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய சிறை வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி இளவரசன், சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், கருணாஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!