இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது – உலக வங்கி!

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பொதுத்துறை ஊழியர்கள் இருப்பதாகவும், ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு குறைந்த சம்பளம் மட்டுமே கிடைப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.
உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கியோவோக் சாக்சியன் தலைமையிலான குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அரசாங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா மற்றும் பிற குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்தப் பிரச்சினைக் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையை சரிசெய்து ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அதிக மின்சாரச் செலவுகளை எதிர்கொள்கிறது.
இந்தச் சூழலில், மின்சாரத் துறையில் அவசர சீர்திருத்தங்களின் அவசியத்தையும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.