இலங்கை

திருமலையில் கடலில் கலக்கும் பொது வைத்தியசாலை கழிவுகள் – சுற்றுலா படகோட்டிகள் விசனம்

திருகோணமலை பொது வைத்தியசாலை இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதன் காரணமாக தமது துறை பாதிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை படகோட்டிகள் கவலை தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ.மதன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று (18) விஜயம் செய்த சுற்றுலாப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் அவ் இடத்தினை பார்வையிட்டு அங்கு காணப்படும் குறைபாடுகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை பொருத்தமான விதத்தில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக வெகு விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுற்றுலா பணியகத்தின் தவைவர் இதன்போது கருத்து வெளியிட்டார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!