போராட்டம் வெடிக்கும்: என்பிபி அரசுக்கு எதிரணி எச்சரிக்கை!
ஊடகங்கள்மீது கைவைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதயில் இறங்கிப் போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJPபொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோல்வி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை.
இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது ஊடக நிறுவனங்களுக்கு ஆளுங்கட்சியால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றன.
ஊடகங்கள்மீது கை வைக்கும் அரசாங்கங்கள் எல்லாம் நிச்சயம் கவிழும். கடந்தகாலங்களில் அவ்வாறு நடந்தும் உள்ளது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழங்கிய பிரச்சாரத்தால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று ஊடகத்துறை அமைச்சர் ஊடகங்களை பகிரங்கமாக எச்சரிக்கை நிலை காணப்படுகின்றது.
நாம் ஊடக சுதந்திரத்துக்காக எப்போதும் முன்னிலையாவோம். எனவே, ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதற்கு அரசாங்கம் முற்பட்டால் மக்களுடன் வீதிக்கு இறங்கி போராடுவோம்.” – என்றார்.





