ஆசியா

தாய்லாந்தில் ஹுன் சென்னுடனான தொலைபேசி அழைப்பு கசிந்ததால் பிரதமரைப் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத்தைப் பதவி விலகும்படி கோரி பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் பேங்காக்கில் ஜூன் 28 கூடியுள்ளனர்.கம்போடியாவுடன் எல்லைத் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து ‌ஷினவாத்தின் அரசாங்கத்துக்கு எதிரான சினம் வலுத்துள்ளது.

2023ஆம் ஆண்டு பியு தாய் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசாங்கத்துக்கு எதிராக முதன்முறையாக ஆகப் பெரிய ஆர்ப்பாட்டம் மூண்டுள்ளது.போர் நினைவிடமான விக்டரி நினைவுச்சின்னத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிகளை அசைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக ‌ஷினவாத்தின் ஆதரவுபெற்ற அரசாங்கத்தை எதிர்த்து வரும் ஆகப் பெரிய தேசியவாத ஆர்வலர்கள் கூட்டணி தாய்லாந்தின் ஒன்றுபட்ட சக்தி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.இதற்குமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கங்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் அவற்றால் ஏற்பட்ட அழுத்தம் 2006, 2014ஆம் ஆண்டுகளில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு இட்டுச்சென்றது.

தாய்லாந்தில் நிலவும் அரசியல் குழப்பம் ஏற்கெனவே தத்தளித்துக்கொண்டிருக்கும் நாட்டின் பொருளியல் மீட்சியை மேலும் சேதப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒன்றுகூடல் குறித்து அக்கறை இல்லை என்ற பெத்தோங்தார்ன், அனைத்தும் அமைதியான முறையில் நடைபெறுவதை மட்டும் உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.“அது மக்களின் உரிமைக்கு உட்பட்டது எனவே நான் எதிர்க்கப்போவதில்லை,” என்றார் அவர்.

முன்னாள் கட்சியான பூம்ஜய்தாய் கட்சி கடந்த வாரம் வெளியேறியதை அடுத்து பெரும்பகுதி கூட்டணியின் ஒரு சிறிய அங்கத்தைத் பெத்தோங்தார்ன் கட்டுக்குள் வைத்துள்ளார்.

தாய்லாந்து நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடும்போது அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்