ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம்!
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன.
வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, பாகிஸ்தானிலும் சில இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. அமெரிக்க துணை தூதுரகமொன்றும் தாக்கப்பட்டுள்ளது.




