நேதன்யாஹுவை பதவி விலக வலியுறுத்தி இஸ்ரேலில் மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹுவை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹமாஸ் வசம் எஞ்சியுள்ள 59 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குள், மீண்டும் காசா மீது போர் தொடுத்துள்ளமையால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வரலாற்றில் முதன்முறையாக அதன் உள்நாட்டு உளவு பிரிவின் தலைவரை நேதன்யாஹு அரசு பதவிநீக்கம் செய்ததை கண்டித்தும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
நேதன்யாஹுவின் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.





